நடிகர் யோகி பாபு திடீர் திருமணம்

05 Feb 2020

விஜய் டிவியில் ஒரு காலத்தில் ஒளிபரப்பாகி வந்த ‘லொள்ளு சபா’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் சிறிய, சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் யோகி பாபு.

அதன்பின், 2006ம் ஆண்டில் வெளிவந்த ‘யோகி’ படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

கடந்த சில வருடங்களாக முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கிறார். கடந்த வருடம் வெளிவந்த ‘தர்ம பிரபு, கூர்கா’ படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த ‘தர்பார், டாணா’ படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும், சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

யோகி பாபுவுக்கும், மஞ்சு பார்கவி என்பவருக்கும் இன்று பிப்ரவரி 5ம் தேதி யோகி பாபுவின் குலதெய்வ கோயிலில் திருமணம் நடைபெற்றது.

வரும் மார்ச் மாதம் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த உள்ளார்கள்.

மணமக்களுக்கு நமது வாழ்த்து

 

Tags: yogi babu

Share via: