அயலான், தமிழ் சினிமாவுக்கும் பெருமை - தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா

05 Feb 2020

24 எஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்க, ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அயலான்’.

இப்படத்தின் பெயர் அறிவிப்பை இரு தினங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் வெளியிட்டார்.

படம் பற்றி தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கூறுகையில்,

“எங்கள் 24 எஎம் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘அயலான்’ படத்தின் தலைப்பிற்கு இணையமே கலங்கும், மிகப்பெரும் வரவேற்பு கிடைத்திப்பது பெரு மகிழ்ச்சி. 
எங்கள் கோரிக்கையின் பேரில், இசைப்புயல் AR ரகுமான் தலைப்பை அறிவித்தது எங்களுக்குப் பெருமை. இந்தப்படம் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே ஏஆர் ரகுமான் அவர்கள் தனது சொந்தப் படம் போல் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார். 

எங்களையும் படம் பற்றிய ஒவ்வொரு சிறு வேலைகளிலும் வெகுவாக ஊக்குவித்தார். தலைப்பிற்காக அவர் உருவாக்கிய ஒரு இசைத் துணுக்கே அபாரமானதாக இருந்தது. அவரது இசை இப்படத்தின் முதுகெலும்பாக இருக்கும்.

‘அயலான்’ என்பது படத்தின் கருவை மையப்படுத்திய தலைப்பு. ‘அயலான்’ என்றால் ஏலியன் என்பது அர்த்தம். Destination earth, சென்றடையும் இலக்கு பூமி எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை ரசிகர்கள் எளிதாக  புரிந்து கொள்வார்கள். நாம் அதைப் பற்றி எந்த ஒரு வார்த்தை சொன்னாலும் படத்தின் சுவாரஸ்யங்களை சொல்லிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. 

இத்தருணத்தில் படத்தின் படப்பிடிப்பு வெகு துரிதமாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு கட்ட படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. 

தமிழின் பிரம்மாண்டமான அறிவியல் புனைவு கதை (சயின்ஸ் ஃபிக்ஷன்)  படமாக இப்படம் உருவாகிறது. எனவே, படத்தில் அதிக அளவிலான  விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதனை முன்னிட்டு படப்பிடிப்பின் போதே போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளும் இணையாக நடைபெற்று வருகிறது. 

இப்படத்தில் பங்கு பெறும் அனைவருக்கும் மற்றும் எங்கள் நிறுவனதிற்கும் மட்டுமல்லாது தமிழ் சினிமாவிற்கே மிக சிறந்ததொரு பெருமையான படைப்பாக இப்படம் இருக்கும்,” என்கிறார்.

அயலான் - Title Motion Poster

Tags: ayalaan, rd raja, sivakarthikeyan

Share via: