வித் லவ் - டிரைலர் வெளியீடு
31 Jan 2026
'டூரிஸ்ட் பேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநயாகனாக அறிமுகமாகும் படம் ‘வித் லவ்’.
சியோன் பிலிம்ஸ் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் சார்பில் பசிலியான் நாசரேத், மகேஷ்ராஜ் பசிலியான் இணைந்து தயாரிக்கும் படம் இது.
அறிமுக இயக்குனர் மதன் இயக்கத்தில் அனஸ்வரா ராஜன், ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், சரவணன், தேனி முருகன், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தங்களது பள்ளிப் பருவத்தில் காதலித்தவர்களிடம் சொல்லமுடியாத காதலை சொல்ல அபிஷன், அனஸ்வரா இருவரும்இணைந்து பயணிப்பது தான் படத்தின் கதை.
இப்படத்தின் டைட்டில் டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில் தற்போது படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்கள். இயக்குனர் அட்லி படத்தின் டிரைலரை வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.
பிப்ரவரி 6 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
Tags: with love

