விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், து.பா.சரவணன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஷால், டிம்பிள் ஹயாத்தி, யோகிபாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வீரமே வாகை சூடும்’.

இப்படத்தை முதலில் ஜனவரி மாதக் கடைசியில் வெளியிடுவதாக திட்டமிட்டிருந்தனர். ஆனால், ‘ஆர்ஆர்ஆர்’ படம் தள்ளிப் போனதால் புதிய படங்களின் வெளியீட்டில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

பொங்கலுக்கு அஜித் நடிக்கும் ‘வலிமை’ வெளியாவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு படம் தமிழ்நாட்டில் இருக்கும் தியேட்டர்களுக்குப் போதாது. அதனால், தன்னுடைய பட வெளியீட்டை பொங்கலுக்கு மாற்றிவிட்டார் விஷால்.

நேற்றுதான் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவித்தார்கள், அடுத்த சில மணி நேரங்களில் படம் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டார்கள்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நேற்று வெளியிட்டுவிட்டார்கள். ஜனவரி 14ம் தேதியன்று ‘வீரமே வாகை சூடும்’ வெளியாகிறது.