அனைவரிடத்திலும் அன்பைப் பரப்புங்கள், ஹன்சிகா வேண்டுகோள்
04 Jan 2022
தமிழ்த் திரையுலகத்தில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் ஹன்சிகா. இடையில் ஒரு தொய்வை சந்தித்த ஹன்சிகா தற்போது பல புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறாராம்.
ஹன்சிகா முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ள ‘மஹா’ படம் விரைவில் வெளிவர உள்ளது.
அடுத்து ‘பார்ட்னர், ரவுடி பேபி, மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ்’, ராஜேஷ் இயக்க உள்ள ஹாட்ஸ்டார் ஒரிஜனல் படம், விஜய் சந்தர் இயக்க உள்ள படம், கண்ணன் இயக்க உள்ள படம் ஆகியவற்றில் நடிக்கப் போகிறாராம்.
புதிய வருடத்தில் பல புது ஒப்பந்தங்களால் மகிழ்ச்சியில் இருக்கும் ஹன்சிகா, அன்பைப் பரப்ப வேண்டியது காலத்தின் தேவை என்று வேண்டு கோள் விடுத்துள்ளார்.
“கடந்த ஆண்டு அனைவருக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்தது. குறிப்பாக, திரையுலகம் தாங்க முடியாத கடினமான சோதனைகளால் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது.
ஆனால் இந்த 2022 புத்தாண்டின் போது அனைவரின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்புவது, இருட்டை விலக்கி தூரத்தில் தெரியும் வெளிச்சம் போல், பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
திரையுலக நண்பர்கள், பத்திரிகை நண்பர்கள் மற்றும் ஊடகங்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் இந்த கடினமான நேரத்தில் ஆதரவாக இருந்த அனைவரின் அன்பிற்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். அவர்களின் அன்பு தான் இந்த உலகத்தை முன்னோக்கி பயணிக்க வைக்கிறது.
இந்த கடின காலத்தில் அன்பை அள்ளித்தரும் அவர்களை ஏராளமாகக் கண்டுபிடித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
தயாரிப்பு நிலையின் வேவ்வெறு கட்டத்தில் உள்ள எனது 9 வெவ்வேறு திரைப்படங்களை உங்களுக்கு அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு அனைவரின் கனவுகளும் இலக்குகளும் நனவாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், வெற்றிகரமாகவும் இருங்கள், மேலும் நேர்மறை எண்ணத்தை பரப்ப மறக்காதீர்கள், அனைவரிடத்திலும் அன்பை பரப்ப வேண்டியது காலத்தின் தேவை.
Tags: hansika, hansika mothwani