‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ முதல் பார்வை வெளியீடு...
08 Jan 2022
கேகேஆர் சினிமாஸ் சார்பில் கேகே ரமேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. பரமன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’.
சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்விகா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இமான் இசையமைக்க, ராஜேஷ் யாதவ், வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். யுகபாரதி பாடல்களை எழுத, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்கிறார்.
இப்படத்தின் முதல் பார்வையை இன்று விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு ஆகியோர் வெளியிட்டார்கள்.
படம் பற்றி இயக்குநர் பரமன் கூறுகையில், ''தமிழ்த் திரை உலகில் அரசியலை மையப்படுத்தி திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அரசியல் தலைவர்களைப் பற்றிய திரைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. முதன் முறையாக அரசியல் கட்சியில் பணியாற்றும் தொண்டர்களைப் பற்றிய படமாக 'சமுத்திரக்கனியின் பப்ளிக்' உருவாகி இருக்கிறது,'' என்கிறார்.
Tags: samuthirakaniyin public, samuthirakani, ra paraman, d imman, kali venkat