தனுஷ் நடிக்கும் ‘வாத்தி’ படம் ஆரம்பம்
04 Jan 2022
தெலுங்கில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் அடுத்து தெலுங்கு, தமிழில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ஒன்றைத் தயாரிக்க உள்ளது.
தமிழில் ‘வாத்தி’ என்றும், தெலுங்கில் ‘சார்’ என்றும் இப்படத்திற்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கும் இப்பத்தின் நாயகியாக மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். சாய்குமார், தணிகலபரணி, நர்ரா ஸ்ரீனிவாஸ் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் பூஜை நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 5ம் தேதி முதல் ஹைதராபாத்தில் ஆரம்பமாகி நடக்கிறது.
Tags: vaathi, sir, dhanush, samyuktha menon, gv prakashkumar, venki atluri