சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘திட்டம் இரண்டு’

26 Jul 2021

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கோகுல் ஆனந்த், சுபாஷ் செல்வம், ஜீவா ரவி மற்றும் பலர் நடித்த ‘திட்டம் இரண்டு’ படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஜூலை 30ம் தேதி வெளியாகிறது. 

சென்னைக்கு பணி மாற்றம், பேருந்து பயணத்தில் சக பயணியின் மீது காதல் என ஆதிராவின் வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டு இருக்கிறது. 

ஆனால், குழந்தைப் பருவ நண்பன் சூரியா காணாமல் போனதாக வரும் ஒரு தொலைபேசி அழைப்பு அனைத்தையும் தலைகீழாக மாற்றுகிறது. சூர்யாவின் கார் விபத்தை விசாரிக்கும் ஆதிரா, அதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருப்பதாக உணர்கிறார். அந்த வழக்கை ஆதிரா எப்படி கையாள்கிறார், இதில் அவர் வெற்றிபெற்றாரா என்பதே படத்தின் மீதிக் கதை. 

படம் பற்றி இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் கூறுகையில், 

சமூகத்தில் உள்ள சில நிகழ்வுகளை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை இந்தப் படம் காட்டுகிறது. அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்படத்தை மக்களிடம் கொண்டு செல்ல மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.  சோனி லிவ்வில் ‘திட்டம் இரண்டு’ வெளியவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி,” என்றார். 

படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில்,

“திட்டம் இரண்டு’ படத்தில் எனது கதாபாத்திரம் பல அடுக்குகளைக் கொண்டது. இந்தக் கதையின் சாராம்சம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. நண்பனின் மறைவில் உள்ள ரகசியத்தை கண்டுபிடிக்க ஒருவர் எந்த எல்லைக்குச் செல்வார் என்பதை இந்தப் படம் கூறும் விதம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. 

படத்தில் உள்ள திருப்பங்கள் பார்ப்பவர்களை ஆச்சர்யப்படுத்தும். சோனி லிவ் ஓடிடியில் இதுவே எனது முதல் படம். ’திட்டம் இரண்டு’ வெளியீட்டுக்காக நான் ஆவலாக உள்ளேன்,” என்றார். 

Tags: thittam irandu, aishwarya rajesh, vignesh karthik, sony liv

Share via: