ஜெய் பீம் - சூர்யாவின் 39வது படத் தலைப்பு

23 Jul 2021

2 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தா.செ.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் 39வது படத்திற்கு ‘ஜெய் பீம்’ என்ற தலைப்பு வைத்து, படத்தின் முதல் பார்வை, இரண்டாம் பார்வை ஆகியவற்றை சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக வெளியிட்டுள்ளார்கள்.

ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்தப் படத்தில், பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோள் ஜோஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

பழங்குடி மக்களின் வாழ்வியல் சார்ந்த கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு உதவும் வக்கீல் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.

இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்கெனவே ‘வாடிவாசல்’ படத்தின் தலைப்புப் பார்வை கடந்த வாரமும், நேற்று சூர்யாவனி 40வது படமான ‘எதற்கும் துணிந்தவன்’ தலைப்பு அறிவிப்பு மற்றும் முதல் பார்வை, மோஷன் போஸ்டர், இரண்டாம் பார்வை ஆகியவையும், இன்று மூன்றாவது பார்வை போஸ்டரும் வெளிவந்தன. 

‘ஜெய் பீம்’ விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: jai bhim suriya, tha se gnanavel, sean roldan

Share via: