எதற்கும் துணிந்தவன் - சூர்யா படத் தலைப்பு அறிவிப்பு
22 Jul 2021
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், சூர்யா நடிக்கும் 40வது படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டது.
‘எதற்கும் துணிந்தவன்’ என படத்திற்குத் தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
நாளை சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத் தலைப்பையும், மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள்.
‘பசங்க 2’ படத்திற்குப் பிறகு பாண்டிராஜ் - சூர்யா இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்கள்.
சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா, தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது.
Tags: suriya, pandiraj, Etharkkum Thunindhavan, priyanka mohan, d imman