சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார்

22 Jul 2021

விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில், இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் ‘மாமனிதன்’ படத்தை இயக்கி முடித்துள்ள சீனு ராமசாமி அடுத்து ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார்.

ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகன் முபாரக் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.

“இதற்கு முன்பு நான் இயக்கிய படங்களிலிருந்து இப்படம் மாறுபட்ட படமாக இருக்கும். கிராமத்துப் பின்னணியில் ஒரு முழுமையான ஆக்ஷன் த்ரில்லர் படம். அடுத்த மாதம் தேனியில் இப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளோம்,” என்கிறார் படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி.

என்ஆர் ரகுந்தன் இப்படத்திற்கு இசையமைக்க வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

Tags: seenu ramasamy, gv prakashkumar, nr ragunanthan

Share via: