நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’, ஆகஸ்ட் 13 ஓடிடி ரிலீஸ்
29 Jul 2021
ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில், மிலிந்த் ராவ் இயக்கத்தில், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைப்பில், நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன், சரண் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘நெற்றிக்கண்’.
கொரியன் திரைப்படமான ‘பிளைன்ட்’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக இப்படம் தயாராகியுள்ளது.
இப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். இன்று ஆகஸ்ட் 13ல் படம் வெளியாகும் என்ற அறிவிப்புடன் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்கள்.
கடந்த வருடம் நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதற்கடுத்து அவர் நடித்த இந்தப் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஒரு க்ரைம் திரில்லர் படமான ‘நெற்றிக்கண்’ படத்தில் கண் பார்வையற்றவராக நயன்தாரா நடித்துள்ளார்.
அவரது காதலர் விக்னேஷ் சிவன் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
Tags: nayanthara, netrikkan, vignesh sivan, ajmal