இறுதிக்கட்டப் பணிகளில் ‘ரூட்’
11 Feb 2026
வெரஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில், ஷேக் முஜீப், சஞ்சய் சங்கர், ராஜராஜன் ஞானசம்பந்தம், தனிஷ்டன் பெர்னாண்டோ ஆகியோர் தயாரிப்பில், சூரிய பிரதாப் எழுதி இயக்கியுள்ள படம் 'Root - Running Out Of Time'.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சை-ஃபை கிரைம் திரில்லர் திரைப்படமான ROOT – Running Out of Time தற்போது அதன் இறுதி வடிவத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், திட்டமிட்டபடியும் தீவிரமாகவும் போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. சஸ்பென்ஸ், எமோஷனல் மற்றும் உயர்கருத்து கொண்ட கதை சொல்லலை ஒன்றிணைக்கும் ஒரு வலுவான திரைக்கதை மற்றும் திறமையான நடிகர்களின் சிறப்பான நடிப்புகளுடன் உருவாகியுள்ளது.
சென்னை மற்றும் பல்வேறு லொகேஷன்களில் படப்பிடிப்பை நிறைவடைந்தது. எடிட்டிங், சவுண்ட் டிசைன், இசை அமைப்பு, VFX இணைப்பு மற்றும் DI பணிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் விரைவாக நடைபெற்று வருகின்றன. கற்பனை செய்யப்பட்ட அளவுக்கும் கனவுக்கும் இணையாக, ஒரு பரபரப்பான சினிமா அனுபவத்தை உருவாக்குவதே படக்குழுவின் இலக்காக உள்ளது.
படத்தின் உருவாக்கம் எவ்வாறு முன்னேறி வருகிறது என்பதில் தயாரிப்பாளர் ஷேக் முஜீப் தனது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
அவர் கூறியதாவது,
“போஸ்ட்-ப்ரொடக்ஷனில் தற்போது உருவாகி வரும் அவுட்புட்டால் நாங்கள் மிகுந்த திருப்தியடைந்துள்ளோம். எடிட்டிங், பின்னணி இசை, VFX, சவுண்ட் டிசைன் என ஒவ்வொரு துறையும் எதிர்பார்ப்பை மீறி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ROOT என்பது தொழில்நுட்ப ரீதியாக சவாலான திரைப்படம். அந்த சவால்களை துல்லியத்துடனும் அர்ப்பணிப்புடனும் படக்குழு எதிர்கொள்வதால், நாங்கள் எதிர்பார்த்த தரத்தை அடைய முடிகிறது. ரஷ் காட்சிகளும் தற்போதைய கட்-களும் மிகுந்த நம்பிக்கையை அளிக்கின்றன. பார்வையாளர்கள் திரையில் தீவிரமும் புதுமையும் நிறைந்த ஒரு அனுபவத்தை உணர்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது,” என்றார்.
இந்த படத்தில் கௌதம் ராம் கார்த்திக் நாயகனாக நடிக்க, அபார்ஷக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். இவர்களுடன் பவ்யா திரிகா, ஒய்ஜி மகேந்திரா, பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர் ஆனந்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழு
ஒளிப்பதிவு – அர்ஜுன் ராஜா
எடிட்டிங் – ஜான் ஆபிரகாம்
இசை – அரன் ரே
CEO – டாக்டர் டி. அலிஸ் ஏஞ்சல்
ஆக்ஷன் கோரியோகிராபி – மிராக்கிள் மைக்கேல்
பிரொடக்ஷன் டிசைனர் – ஜகன் நந்தகோபால்
VFX – சந்தகுமார் (ஹோகஸ் போகஸ் ஸ்டூடியோஸ்)
ஆடை வடிவமைப்பு – தீப்தி RJ
பிரொடக்ஷன் கண்ட்ரோலர் – தனலிங்கம்
DI – பிரசாத் ஸ்டூடியோஸ்
கலரிஸ்ட் – ரங்கா
சவுண்ட் டிசைனர் – ஆனந்த் ராமச்சந்திரன்
பப்ளிசிட்டி டிசைனர் – தினேஷ் அசோக்
பப்ளிக் ரிலேஷன்ஸ் – ரேகா
டிஜிட்டல் புரமோஷன்ஸ் – டிஜிட்டலி பவர்ஃபுல்
Tags: root, gautham ram karthik

