சத்தமின்றி முடிவடைந்துள்ள டாப்ஸி படம்

12 May 2024

தமிழில் சத்தமின்றி டாப்ஸி நடித்துள்ள ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

அருள்நிதி நடிப்பில் உருவான ‘கே 13’ படத்தினை இயக்கியவர் பரத் நீலகண்டன். தனது இரண்டாவது படத்திற்காக பல்வேறு நடிகர்களிடம் கதைகள் கூறிவந்தார். இறுதியாக இவருடைய கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார் டாப்ஸி.

தற்போது இந்தப் படத்தினை ஒரே கட்டமாக படப்பிடிப்பினை முடித்துவிட்டார்கள். முழுக்க கிராபிக்ஸ் பணிகள் இருப்பது போன்ற கதை என்பதால் அதன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அவை முடிய இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.

இதனால், அந்தப் பணிகள் முடிவதைப் பொறுத்து விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளது படக்குழு. பரத் நீலகண்டன் - டாப்ஸி படத்தினை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Tags: taapsee

Share via: