இந்தியில் தொடர்ந்து கவனம் செலுத்த ஜூனியர் என்.டி.ஆர் முடிவு

12 May 2024

இந்தி திரையுலகில் தொடர்ந்து கவனம் செலுத்த ஜூனியர் என்.டி.ஆர் முடிவு செய்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில் ‘தேவாரா’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வரவேற்புக்குப் பிறகு இந்தியில் ‘வார் 2’ படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பில் ‘வார் 2’ படம் உருவாகி வருகிறது. யாஷ்ராஜ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தினை தயாரித்து வருகிறது. இதனிடையே, இந்தி திரையுலகில் முன்னணி ஏஜென்சி நிறுவனம் ஒன்றிணை ஜூனியர் என்.டி.ஆர் குழுவினர் நாடியிருக்கிறார்கள்.

இந்த ஏஜென்சி நிறுவனம் தான் ஜூனியர் என்.டி.ஆருக்கு படங்கள், விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை கவனிக்க இருக்கிறது. இது முன்னணி தென்ன்னிந்திய நடிகர்கள் யாருமே செய்யாத விஷயமாகும். ஜூனியர் என்.டி.ஆரின் முடிவின் மூலம் தொடர்ச்சியாக இந்தியிலும் கவனம் செலுத்த முடிவு செய்திருப்பது உறுதியாகி இருக்கிறது.

Tags: jr.ntr

Share via: