அரசியலில் களம் இறங்குகிறாரா சூர்யா?

12 May 2024

அரசியலில் களம் இறங்க சூர்யா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் களம் இறங்க முடிவு செய்துவிட்டார் விஜய். இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படமே அவருடைய கடைசி படமாக இருக்கும் என்பது முடிவாகிவிட்டது. அதற்கான பணிகள் ஆரம்பாகி நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, சூர்யாவும் அரசியலில் களம் காண இருப்பதாக தெரிகிறது. ஏனென்றால், அவருடைய ரசிகர் மன்றத்தினை விரிவுப்படுத்தி வலுப்படுத்த முடிவு செய்திருக்கிறார். இதற்காக அவருடைய மன்றத்தின் முன்னணி நிர்வாகிகள் அனைத்து மாவட்டத்திற்கு பயணப்பட்டு வருகிறார்கள்.

நிர்வாகிகள் இல்லாத வாரியத்திற்கு நிர்வாகிகளை நியமிப்பது மற்றும் இருக்கும் நிர்வாகிகளை ஊக்குவிப்பது என களமிறங்கி இருக்கிறார்கள். அதுமட்டுமன்றி மாவட்டம் தோறும் ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தியுள்ளார்கள்.

இவை அனைத்தையும் வைத்து பார்த்தால் 2026-ம் ஆண்டு தேர்தலில் சூர்யாவும் களம் இறங்குவாரா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.

 

Tags: suriya

Share via: