ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து செய்ய முடிவு ?

13 May 2024

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவருமே விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இசையமைப்பாளர் மட்டுமன்றி நடிகர், தயாரிப்பாளர் என்றும் பணிபுரிந்து வருகிறார். இவரும் பாடகி சைந்தவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதியினருக்கு அன்வி என்ற குழந்தை இருக்கிறது. இருவருக்கும் இடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. குடும்ப ரீதியான பிரச்சினை என்பதால் இருவரும் சுமூகமாக பேசி விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக இருவருமே ஒன்றாக விரைவில் அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.

Tags: gv prakash kumar

Share via: