கைவிடப்படுகிறது ‘குற்றப்பரம்பரை’ வெப்சீரிஸ்?

13 May 2024

சசிகுமார் இயக்கத்தில் உருவாக இருந்த ‘குற்றப்பரம்பரை’ வெப்சீரிஸ் கைவிடப்படும் என கூறப்படுகிறது.

தனக்கு ஏற்பட்ட கடன் பிரச்சினையால், படம் இயக்குவதை விட்டுவிட்டு முழுநேர நடிகனாக வலம் வருகிறார் சசிகுமார். அவருடைய நடிப்பில் இப்போதும் 9 படங்கள் தயாராக இருக்கின்றன. எப்போது வெளியாகும் என்பதே தெரியாமல் இருக்கிறது.

இதனிடையே இந்த ஆண்டிற்குள் ‘குற்றப்பரம்பரை ’ வெப்சீரிஸை தொடங்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார் சசிகுமார். இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இதில் சத்யராஜ், விஜய பிரபாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பதாகவும் இருந்தது. தற்போது ‘குற்றப்பரம்பரை’ வெப்சீரிஸ் கைவிடப்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஏனென்றால், ஹாட்ஸ்டார் நிறுவனத்தில் வெளியான சமீபத்திய வெப்சீரிஸ் அனைத்துமே பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. இதனால், தங்களுடைய அடுத்த வெப்சீரிஸ் பட்டியலில் பலவற்றை நிறுத்திவிட்டார்கள். இதில் ‘குற்றப்பரம்பரை’ வெப்சீரிஸும் அடங்கும். இதுமட்டுமன்றி மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வந்த வெப்சீரிஸையும் நிறுத்திவிட்டது ஹாட்ஸ்டார் நிறுவனம்.

முன்பாக பாலா தொடங்குவதாக இருந்த ‘குற்றப்பரம்பரை’ படமும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு நிறுத்தப்பட்டது. தற்போது சசிகுமார் தொடங்குவதாக இருந்த ‘குற்றப்பரம்பரை’ வெப்சீரிஸும் நிறுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: sasikumar, kutramparambarai, web series

Share via: