இந்தியில் அறிமுகமாகும் ஸ்ரீலீலா

26 Jun 2024

வருண் தவான் படத்தின் மூலம் இந்தியிலும் நாயகியாக அறிமுகமாகிறார் ஸ்ரீலீலா.

தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவருடைய நடனம் பெரும் பிரபலம். இவருடைய நடன வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது. தமிழிலும் நாயகியாக அறிமுகமாக பல்வேறு நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது ஸ்ரீலீலா இந்தியில் அறிமுகமாவது உறுதியாகி இருக்கிறது. டிப்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இடேவின் தவான் இயக்கத்தில் வருண் தவான் நாயகனாக நடிக்கவுள்ளார். முழுக்க காமெடி பின்னணியில் கமர்ஷியல் படமாக இது உருவாகவுள்ளது.

இதில் மிருணாள் தாகூர் மற்றும் ஸ்ரீலீலா இருவரும் நாயகிகளாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

Tags: sree leela

Share via: