அர்ஜுன் தாஸுக்கு நாயகியாகும் அதிதி ஷங்கர்
26 Jun 2024
அர்ஜுன் தாஸுக்கு நாயகியாக நடிக்க அதிதி ஷங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
’குட் நைட்’, ‘லவ்வர்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் புதிய படமொன்றை தயாரிக்கவுள்ளது. இதையும் புதுமுக இயக்குநர் ஒருவரே இயக்கவுள்ளார். அவருடைய பெயரை அதிகாரபூர்வமாக படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.
தற்போது இதில் நடிக்கவிருப்பவர்களின் பெயர் வெளியாகி இருக்கிறது. நாயகனாக அர்ஜுன் தாஸ், நாயகியாக அதிதி ஷங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். முழுக்க காதல் சம்பந்தப்பட்ட படமாக இது உருவாகவுள்ளது.
இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஹேசம் அப்துல் வஹாப் பணிபுரியவுள்ளார். ஹ்ரிதயம், குஷி, ஹாய் நானா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் ஹேசம் அப்துல் வஹாப் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் இசையமைக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.
இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது
Tags: arjun das, aditi shankar