என் விருப்பப்படி ஆடை அணிவேன் - சமந்தா

18 Mar 2020

சினிமாவில் திருமணம் முடிந்தபின் நடிகைகளை நாயகியாக நடிக்க வைக்கத் தயங்குவார்கள். திருமணம் முடிந்தபின் அவர்களுக்கு இமேஜ் குறைந்துவிடும் என்பதுதான் காலம் காலமாக சினிமாவில் இருந்து வருகிறது.

ஆனாலும், திருமணத்திற்குப் பின் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெற்றிப் படங்களில் நடித்துள்ள நடிகை சமந்தா.

திருமணம் ஆன பின் நடிகைகள் கிளாமராக ஆடை அணியத் தயங்குவார்கள். ஆனால், சமந்தா தொடர்ந்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட கிளாமரான ஆடைகளை அணிந்து பல புகைப்படங்க வெளியிட்டு வருகிறார்.

அது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“திருமணத்திற்குப் பின் வெளிப்படையாக கிளாமரான ஆடைகள் அணியத் தயங்கினேன். திருமணத்திற்குப் பின் முதல் முறை அப்படி ஆடை அணிந்த போது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். இரண்டாவது முறை அணிந்த போது கொஞ்சம் பரவாயில்லை. நான் தைரியமாக அதைச் செய்கிறேன் என்று சொல்லவில்லை. இருந்தாலும் விமர்சனங்களைக் கண்டு பயந்தேன். ஆனால், எனக்குள்ளேயே எல்லாம் மாறிவிட்டது என்று சொல்லிக் கொண்டேன். பின் எனது விருப்பப்படி ஆடைகளை அணிய ஆரம்பித்தேன்,” என்று கூறியுள்ளார்.

Tags: samantha, actress samantha

Share via: