அரண்மனை கிளி - விலகிய நீலிமா ராணி

18 Mar 2020

விஜய் டிவியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்று ‘அரண்மனை கிளி’.

இத் தொடரில் டிவி, சினிமா இரண்டிலும் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ள நீலிமா ராணி, துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அவருடைய நடிப்புக்கு பல ரசிகர்கள், ரசிகைகள் உண்டு. இந்நிலையில் இத் தொடரிலிருந்து விலகுவதாக நீலிமா தெரிவித்துள்ளார்.

அது குறித்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளதாவது, 

“கேமரா முன்னாடி இருக்கும் போது நான் மிகவும் மகிழ்ச்சியானவளாக இருபபேன். எனது சிறு வயதிலிருந்தே நடித்து வருகிறேன். ஆனால், இப்போது வாழ்க்கையில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. அதை ஆச்சரியத்துடனும், ஆவலுடனும் வரவேற்கக் காத்திருக்கிறேன். பை துர்கா, உன்னை மிஸ் செய்வேன்,” என்று தெரிவித்துள்ளார்.

Tags: aranmanai kili, vijay tv, neelima rani

Share via: