மெய்நிகர் படமாக உருவாகியுள்ள ‘ரெட் பிளவர்’
22 Feb 2025
ஸ்ரீ காளிகாம்பாள் பிச்சர்ஸ், கே. மாணிக்கம் தயாரிப்பில், ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் விக்னேஷ், மனிஷா ஜஷ்னானி, மற்றும் நாசர், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ஒய்.ஜி. மகேந்திரன், லீலா சாம்சன், யோக் ஜேபி, நிழல்கள் ரவி, டி.எம். கார்த்திக், மோகன் ராம், சுரேஷ் மேனன் நடித்துள்ள படம் ‘ரெட் பிளவர்’.
படம் பற்றி தயாரிப்பாளர் மாணிக்கம் கூறுகையில், “ரெட் பிளவர், பார்வையாளர்களுக்கு இதுவரை கண்டிராத சர்வதேச தொழில்நுட்பம் சார்ந்த சினிமா அனுபவத்தை, ஆழமான உணர்ச்சிகள் மற்றும் உயர் ஆக்ஷனுடன் கலந்திருக்கும். உலக சினிமா ரசிகர்களுக்கு, இந்தப் படம் ஒரு உண்மையான பிரமாண்டமான உணர்ச்சிகரமான காட்சி விருந்தாக இருக்கும்,” என்றார்.
இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறுகையில்,
உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அனைத்து கலைஞர்களும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். ரெட் பிளவர் படம், காட்சிக்குக் காட்சி. உணர்ச்சி - உந்துதல் ஒளிப்பதிவு மற்றும் ஹைப்பர்-ரியலிஸ்டிக் கிராபிக்ஸ் என பார்வையாளர்கள் மனதைக் கவரும் மெய்நிகர் படம்.
ஒளிப்பதிவாளர் தேவ சூர்யாவின் அற்புதமான ஒளிப்பதிவில், பிரான்சிஸ் சேவியரின் கலர் கிரேட்டிங் ஆகியவற்றின் கீழ், ஒவ்வொரு பிரேமும் டிஜிட்டல் கதை பரிணாமத்திற்கு ஒரு சான்றாகும். சந்தோஷ் ராமின் ஆன்மாவைத் தூண்டும் இசை ஒவ்வொரு காட்சியையும் உயர்த்துகிறது, ஆர்கெஸ்ட்ரா பிரம்மாண்டத்தை ஃப்யூட்ரஸ்ட்டிக் ஒலிக் காட்சிகளுடன் கலக்கிறது. மணி அமுதவனின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் உணர்ச்சி ஆழத்தை பெருக்கி, ஒவ்வொரு தருணத்தையும் மறக்க முடியாததாக ஆக்குகிறது.
ஸ்டன்ட் மாஸ்டர் இடி மின்னல் இளங்கோவின் விறுவிறுப்பான சண்டை காட்சிஅமைப்பு வியக்க வைக்க, அரவிந்தின் கூர்மையான எடிட்டிங், வேகத்தை இறுக்கமாக வைத்திருக்கிறது, ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் சுவாரஸ்யமான சினிமா பயணத்தை உறுதி செய்கிறது,” என்கிறார்.
ஃப்யூட்ரஸ்ட்டிக் கதைக்களம், அதிநவீன விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் அதிரடி ஆக்க்ஷன் காட்சிகளுடன், ரெட் பிளவர் திரைப்படம், இந்தியாவின் சினிமா வரலாற்றில், ஒரு புதிய அளவுகோலை அமைக்க தயாராகிக் கொண்டிருக்கிறது.
ஏப்ரல் 2025 இல் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரெட் பிளவர்’ வெளியாகவுள்ளது…
Tags: red flower