‘மான் கராத்தே’ படத்திற்கு 'U' சான்றிதழ்...
27 Mar 2014
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பி.மதன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, திருக்குமரன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மான் கராத்தே’ படத்தின் தணிக்கை இன்று நடைபெற்றது.
படத்திற்கு எல்லா தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வெளிவரும் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாகி விட்டது.
ஹன்சிகா, சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளதாலும், படம் முழுமையான என்டர்டெயின்மென்ட்டாக இருக்கும் என்பதும், படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.