சிவகார்த்திகேயன் புதிய படம் சிறப்பான ஆரம்பம்
02 Nov 2015
24 எஎம் ஸ்டுடியோஸ் சார்பாக ஆர்.டி.ராஜா தயாரிக்க பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று சிறப்பாக ஆரம்பமானது.
அனிருத் இசையமைக்க பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய உள்ள இந்தப் படம் நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாக உள்ளது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்திலும் நடிக்க உள்ளார். இதற்காக ‘ஐ’ படத்தில் சிறப்பு மேக்கப்புகளைச் செய்த வீடா நிறுவனத்தைச் சேர்ந்த சீன் ஃபூட் செய்கிறார்.
முற்றிலும் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இப்படம் தயாராகப் போகிறது.
சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் படமாக இந்தப் படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.