30 நாட்களில் படப்பிடிப்பு முடிந்த ‘கும்பாரி’

28 Apr 2021

ராயல் எண்டர்ப்ரைசஸ் சார்பில் 'பறம்பு' குமாரதாஸ் தயாரிப்பில் தமிழ், மலையாளம் மொழிகளில் உருவாகும் திரைப்படம் 'கும்பாரி'. 

யோகிபாபு நடிப்பில் 'எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா' திரைப்படத்தை இயக்கிய கெவின் இயக்கும் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த  30 நாட்களாக நடைபெற்று முடிந்தது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டினர்.

நாயகனாக அபி சரவணன், நாயகியாக மஹானா ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், மதுமிதா, சாம்ஸ், காதல் சுகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் கெவின் கூறுகையில்,

“இந்தப் படம் காதல், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. நாயகனின் காதலை சேர்த்து வைத்த பால்ய மீனவ நண்பன் திடீரென காணாமல் போகிறான். காணாமல் போன நண்பனை நாயகன் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.

இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமாரி, நாகர்கோவில், பூவாறு,  முட்டம், பறம்பு மற்றும் கேரளாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் 30 நாட்களாக  ஒரே கட்டமாக  நடத்தி முடித்துள்ளோம்,” என்றார்.

பிரசாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஜெயப்ரகாஷ் & ஜெய்தன் ஆகியோர் இசையமைக்கிறார்கள்.
 
ஜெய் படத்தொகுப்பு செய்ய, ராஜு முருகன் நடனம் அமைத்துள்ளார். மைக்கல் சண்டைக்காட்சிகளை அமைக்க, கிருஷ்ணமூர்த்தி டிஐ செய்கிறார்.

Tags: kumbari,

Share via: