2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், சூர்யா, லிஜோமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜெய் பீம்’. 

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ம் தேதி வெளியாகும் இப்படத்தின் தமிழ், தெலுங்கு டிரைலர் கடந்த வாரம் வெளியானது. இப்போது கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டிரைலரை வெளியிட்டுள்ளார்கள்.

சூர்யா நடித்துள்ள ஒரு படம் ஒரே நாளில் 5 மொழிகளில் வெளியாவது இதுவே முதல் முறை. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைப் பிரச்சினை ஒன்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் டிரைலர் யூ டியூபில் 15 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மற்ற மொழி டிரைலர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.