இளையராஜா பயோபிக்கில் ஏற்பட்டுள்ள சிக்கல்

29 Mar 2024

இளையராஜா பயோபிக் திரைக்கதையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க ‘இளையராஜா’ என்ற பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்த இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது.

இந்தப் படத்தின் தயாரிப்பில் இளையராஜாவுக்கும் ஒரு பங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவின் வாழ்க்கையில் பல்வேறு முன்னணி நட்சத்திர நடிகர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதால், எப்படி கையாளலாம் என்ற ஆலோசனையில் இறங்கியிருக்கிறது படக்குழு. மேலும், திரைக்கதை எழுத இருப்பதாக கமல் அறிவித்துவிட்டார்.

ஆனால், முழுக்க தேர்தல் பணிகள், ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு ஆகியவை இருப்பதால் எப்போது திரைக்கதை அமைக்கும் பணிகள் மேற்கொள்வார் என்பதும் தெரியாமல் இருக்கிறது.

அதுமட்டுமன்றி, இளையராஜாவின் கதை மிகவும் பெரியது என்பதால் இப்போதைக்கு 2-ம் பாகமாக எடுக்கலாம் என்பதை மட்டும் முடிவு செய்திருக்கிறார்கள். அதில் முதல் பாகத்தினை எந்த இடத்தில் முடித்தால் சரியாக இருக்கும் என்பதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Tags: ilayaraja, dhanush, kamal haasan

Share via: