மே 31 வெளியாகிறது ‘கருடன்’
11 May 2024
சூரி நடித்துள்ள ‘கருடன்’ திரைப்படம் மே 31-ம் தேதி வெளியாகிறது.
துரை.செந்தில்குமார் இயக்கத்தில் சசிகுமார், சூரி, உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருடன்’. லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தினை தயாரித்துள்ளது. இதுவரை இந்தப் படத்தின் அறிமுக டீஸர் மட்டுமே வெளியாகியுள்ளது.
ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் விற்றுவிட்டாலும் சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது படக்குழு. தற்போது மே வெளியீடு என்று போஸ்டர் வெளியிட்டுள்ளது படக்குழு. இதன் வெளியீட்டுக்கு மே 31-ம் தேதியை தேர்ந்தெடுத்துள்ளது படக்குழு. தணிக்கையில் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது.
‘விடுதலை’ படத்திற்குப் பிறகு சூரி நாயகனாக நடித்திருக்கும் படம் என்பதால், இந்தப் படத்தின் வசூல் நிலவரங்களை வைத்தே அவருடைய மார்க்கெட் என்ன என்பது முடிவாகும். இதனால் சூரிக்கு மிக முக்கியமான படமாக ‘கருடன்’ கருதப்படுகிறது. விரைவில் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளது படக்குழு.
Tags: garudan, soori, sasi kumar