'கூலி' படப்பிடிப்பு திட்டங்கள்

11 May 2024

‘கூலி’ படப்பிடிப்பு திட்டங்கள் என்னவென்று தெரியவந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதன் அறிவிப்புக்கான டீஸர் வெளியாகிவிட்டாலும், படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது. மேலும், இந்தப் படத்தின் திரைக்கதை வடிவத்தினை இப்போது தான் எழுதி வருகிறார்கள். முதல் பாதியை முடித்து, இரண்டாம் பாதியை எழுதி வருகிறார்கள்.

இதனிடையே, ஜுன் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது படக்குழு. ஜுன் 5-ம் தேதி நல்ல நாளாக இருப்பதால் அன்றைய தினம் படப்பிடிப்பு தொடங்கிவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார் ரஜினி. அன்றைய தினம் படப்பிடிப்புக்கு பிற்கு எப்போது வேண்டுமானாலும் முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்கி கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். 

இதனால் ஜுன் 5-ம் தேதி என்ன காட்சி படப்பிடிப்பு நடத்தலாம், அதற்கான தேவை, அரங்குகள் என்று பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு.

Tags: coolie, lokesh kanagaraj, rajinikanth, anirudh

Share via:

Movies Released On March 15