பிரண்ட்ஷிப் - ஹர்பஜன் சிங் படத்தில் பாடிய சிம்பு

06 Jul 2020

ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிரண்ட்ஷிப்’.

இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் கடந்த சீசனில் பங்கேற்ற இலங்கைத் தமிழரான லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் அர்ஜுன், சதிஷ், JSK சதீஷ்குமார், வெங்கட் சுபா  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் .

இப்படத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் மாணவராக, தீவிர ரஜினிகாந்த் ரசிகராக ஹர்பஜன் சிங் நடிக்கிறார்.

அதற்காக ‘Superstar Anthem‘ என்று உருவான முதல் பாடலை ராகவா லாரன்ஸ் வெளியிட்டார். சிம்பு இந்த பாடலைப் பாடியுள்ளார் . அறிமுக இசைஅமைப்பாளர் DM உதயகுமார் இசையமைத்துள்ளார்.

ஹர்பஜன் சிங் பிறந்தநாளை முன்னிட்டு இப்பாடல் வெளியிடப்பட்டது. ஹர்பனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிம்பு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும, “பாடல் சிறப்பாக இருக்கிறது, படம் மிகப் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள் எனத் தெரிவித்துளளார். பதிலுக்கு ஹர்பஜன், “எனக்கு இப்படத்தின் மூலம் ஒரு நல்ல நண்பனாக கிடைத்துள்ளீர்கள். சென்னையில் நாம் இருவரும் விரைவில் சந்திப்போம்,"எனக் கூறியுள்ளார் .

‘பிரண்ட்ஷிப்’ விரைவில் இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது.

Tags: friendship, harbhajan singh, losliya, simbu

Share via: