தீபாவளி நாளில் வெளியாகும் ‘டூட்’

11 May 2025

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி வரும் 'டூட்' படத்தில் இருந்து நடிகை மமிதா பைஜூவின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் படத்தை இயக்க, சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

படத்தில் இருந்து பிரதீப் ரங்கநாதனின் முதல் பார்வை போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து இன்று படக்குழு மமிதாவின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது. 'பிரேமலு' படத்தில் தனது எனர்ஜிடிக்கான கதாபாத்திரம் மூலம் அனைவரையும் கவர்ந்த மமிதா இந்த போஸ்டரில் பிரதீப்புக்கு சிறந்த ஜோடியாக இருக்கிறார். டிரெண்டிங் உடையில் பிரதீப்புடன் இருக்கும் அவரது தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 

இந்தப் படத்தில் பல திறமையாளர்களை மைத்ரி மூவி மேக்கர்ஸ் கொண்டு வந்துள்ளது. சாய் அபயங்கர் இசையமைக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, தயாரிப்பு வடிவமைப்பாளராக லதா நாயுடுவும் படத்தொகுப்பாளராக பரத் விக்ரமனும் பணியாற்றியுள்ளனர். 

தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த வருடம் தீபாவளிக்கு படம் வெளியாக உள்ளது.

நடிகர்கள்: பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜு, ரோகிணி மொல்லெட்டி, ஹிருது ஹாரூன், டிராவிட் செல்வம் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து மற்றும் இயக்கம்: கீர்த்தீஸ்வரன்

தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி, ஒய் ரவிசங்கர்,

சிஇஓ: செர்ரி,

நிர்வாக தயாரிப்பாளர்: அனில் எர்னேனி,

இசை: சாய் அபயங்கர்,

ஒளிப்பதிவாளர்: நிகேத் பொம்மி,

தயாரிப்பு வடிவமைப்பாளர்: லதா நாயுடு,

ஆடை வடிவமைப்பாளர்: பூர்ணிமா ராமசாமி,

எடிட்டர்: பரத் விக்ரமன்,

மக்கள் தொடர்பு (தமிழ்): சுரேஷ் சந்திரா, சதீஷ் 

மக்கள் தொடர்பு (தெலுங்கு): வம்சி-சேகர்

மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட் ஷோ

Tags: dude, pradeep ranganathan, mamitha baiju

Share via: