சேரன், கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்
11 Feb 2021
2019ம் ஆண்டு யோகிபாபு நடித்த ‘தர்மபிரபு’ படத்தைத் தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் அடுத்து சேரன், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்க உள்ளார்கள்.
இப்படத்தை நந்தா பெரியசாமி இயக்குகிறார். தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர், ஜீவிதாவின் இரண்டாவது மகள் ஷிவாமிகா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மற்றும் டேனியல் பாலாஜி, சரவணன், கிழக்கு சீமையிலே விக்னேஷ், சிங்கம் புலி, ஜோமல்லூரி, கவிஞர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தர்ராஜன், விஜய் டிவி ஜாக்குலின், மௌனிகா, மைனா, பருத்திவீரன் சுஜாதா, ஜானகி, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் என ஏராளமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்க உள்ளார்கள்.
‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்திற்கு இசையமைத்த சித்துகுமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவிஞர் சினேகன் பாடல்கள் எழுத, பொர்ரா பாலபரணி ஒளிப்பதிவு செய்கிறார்.
ஸ்ரீ வாரி பிலிம்ஸ் சார்பாக P.ரங்கநாதன் தயாரிக்க வரும் மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற உள்ளது.
Tags: cheran, gautham karthik, nanda periyasami, sidhukumar, snehan