லைவ் டெலிகாஸ்ட் - தூங்க முடியாமல் தவித்த காஜல் அகர்வால்
11 Feb 2021
வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் வெப் சீரிஸ் ‘லைவ் டெலிகாஸ்ட்’.
இத்தொடர் நாளை பிப்ரவரி 12ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. வைபவ், கயல் ஆனந்தி, ப்ரியங்கா, செல்வா, டேனியல் போப், சுப்பு பஞ்சு அருணாசலம், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்
மாந்திரீக சக்திகள் நிறைந்த, ஒரு ஆள் அரவமற்ற வீட்டில் டிவி தொடர் ஒன்று படமாக்கப்படும் போது ஏற்படும் வினோத அனுபவங்களின் தொகுப்பே ‘லைவ் டெலிகாஸ்ட்’.
இத்தொடரில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட காஜல் அகர்வால்
"நாங்கள் படப்பிடிப்புக்கு தேர்ந்தெடுத்த இடம் மிக மிகப் பொருத்தமானது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் நண்பர் ஒருவருடைய வீடு அது. மலையின் உச்சியில் இருக்கும் அந்த வீடு அங்கு தனித்து இருந்த வீடாகும். படப்பிடிப்பு பெரும்பாலும் அங்கேயேதான் நடந்தது.
படப்பிடிப்புக்கு பின்னரும் அந்த இடம் தந்த அச்சம் காரணமாக என்னால் தூங்கக் கூட முடியவில்லை. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் கூட அந்த வீட்டிலேயே நான் இருப்பதாக ஒரு பிரமை என்னை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. இன்று நினைத்தாலும் என் குலை நடுங்குகிறது.
தொடரை பார்க்கும் ரசிகர்களுக்கும் அந்த உணர்வு ஏற்படும்," என்கிறார்.
Tags: kajal agarwal, venkat prabhu, vaibhav, anandhi, live telecast