தர்ஷன், காளி வெங்கட் நடிக்கும் ‘ஹவுஸ்மேட்ஸ்’

11 Feb 2025

பிளேஸ்மித் ஸ்டுடியோஸ் சார்பில் விஜய பிரகாஷ் தயாரிப்பில், சவுத் ஸ்டுடியோஸ் சக்திவேல் படைப்புத் தயாரிப்பு செய்ய ராஜவேல் இயக்கும் படம் ‘ஹவுஸ்மேட்ஸ்’.

 ‘கனா , தும்பா’ படங்களில் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த தர்ஷன் கதையின் நாயகனாக நடிக்க, முக்கியமான கதாபாத்திரத்தில் காளி வெங்கட் நடிக்கிறார். இவர்களுடன் அர்ஷா சாந்தினி பைஜு, வினோதினி, தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் இயக்குனர் ராஜவேல், இயக்குனர் அஜய் ஞானமுத்துவிடம் இணை இயக்குனர் ஆகவும் , சமீபத்தில் வந்து வெற்றி பெற்ற ‘டிமாண்டி காலனி 2’ எழுத்தாளர் குழுவிலும் பணியாற்றியவர். எம்எஸ் சதீஷ் ஒளிப்பதிவு செய்ய, ‘நேரம், பிரேமம்’ படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார்.    

ஒரு அபார்ட்மெண்டைச் சுற்றிலும் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாகவும் , மிடில் கிளாஸ் குடும்பங்களின் அன்றாட உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலும் , படம் முழுக்க முழுக்க ஃபேண்டஸி, ஹாரர் என அனைவரும் விரும்பி பார்க்கும் வகையிலும் , குடும்பமாக சென்று ரசிக்கும் வகையிலும் இப்படம் உருவாகியுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.

 தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன .கோடை விடுமுறையில் படம் திரைக்கு வர உள்ளது.

Tags: housemates, darshan, kaali venkat

Share via: