கார்த்தி பட வெளியீட்டில் மாற்றம்
01 Mar 2024
கார்த்தியின் படங்கள் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
‘ஜப்பான்’ படத்துக்குப் பிறகு நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தொடங்கினார் கார்த்தி. இதில் ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள்.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் இரண்டு கேரக்டர்களில் ஒன்றை மட்டுமே படமாக்கி முடித்துள்ளார்கள்.
நலன் குமாரசாமி படத்துக்கு இடையே, 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கிய படத்தினைத் தொடங்கினார் கார்த்தி. இதில் அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். இதன் படப்பிடிப்பு காரைக்குடி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது.
பிரேம்குமார் படம் லைவ் சவுண்ட் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. மேலும், ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு. லைவ் சவுண்ட் தொழில்நுட்பம் என்பதால் படத்துக்கு டப்பிங் பணிகள் கிடையாது. இதனால் படத்தின் பணிகளை உடனடியாக முடித்துவிடலாம்.
இதனால் நலன் குமாரசாமி படத்துக்கு முன்பாக, பிரேம்குமார் இயக்கியுள்ள படத்தினை வெளியிட்டுவிடலாம் என்று முடிவு செய்துள்ளார் கார்த்தி.
இது குறித்து இரண்டு படத்தின் தயாரிப்பாளர்களிடமும் பேசியுள்ளார். அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.
தற்போது சென்னையில் நலன் குமாரசாமி படத்தின் இன்னொரு கதாபாத்திரத்துக்கான படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
Tags: karthi