ராஜுமுருகன் இயக்கத்தில் மணிகண்டன்
01 Mar 2024
ராஜுமுருகன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார் மணிகண்டன்.
‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’, ‘ஜப்பான்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராஜுமுருகன். இதில் இறுதியாக வெளியான ‘ஜப்பான்’ திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. இது கார்த்தி நடிப்பில் வெளியான 25-வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
’ஜப்பான்’ தோல்வியைத் தொடர்ந்து, இனி கதையை நம்பி மட்டுமே களம் இறங்கலாம் என்று தீர்மானித்தார் ராஜுமுருகன். அதற்கு ஏற்றார் போல் கோயம்புத்தூரில் தங்கியிருந்து கதையொன்றை எழுதி முடித்தார்.
அந்தக் கதையை ‘ஜிப்ஸி’ படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமார் தயாரிக்க முன்வந்தார்.
இக்கதைக்கு நாயகனாக மணிகண்டன் சரியாக இருக்கும் என்று தீர்மானித்து, பேச்சுவார்த்தை நடைபெற்றது. மணிகண்டனும் ஒ.கே சொல்ல இந்தக் கூட்டணி உறுதியாகி இருக்கிறது.
தற்போது புதுமுக இயக்குநர் இயகக்த்தில் படமொன்றில் நடித்து வருகிறார் மணிகண்டன். அதனைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார்.
தற்போது படத்தின் முதற்கட்ட பணிகளைத் தொடங்கி பணியாற்றி வருகிறார் ராஜுமுருகன்.
Tags: manikandan, rajumurugan