துல்கர் சல்மான் நடிக்கும் 41வது படம் ஆரம்பம்

05 Aug 2025

துல்கர் சல்மான், ரவி நெலகுடிடி, சுதாகர் செருகுரி, எஸ்எல்வி சினிமாஸ், கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான #DQ 41 - #SLV 10  பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது.

நடிகர் நானி கிளாப் அடித்து தொடங்கி வைக்க, வழக்கமான படப்பிடிப்பு ஆரம்பமானது.

துல்கரின் 41வது படமாகத் தயாராகும் இந்தப் படத்தில்  அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைகிறார். சமகால காதல் கதையாகத் தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனம் சார்பில் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். இந்தத் திரைப்படம் இந்த நிறுவனத்தின் சார்பில் தயாராகும் பத்தாவது திரைப்படம் .

ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான தொடக்க நிகழ்வில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். சுப முகூர்த்த படப்பிடிப்பிற்கு  நானி கலந்துகொண்டு கிளாப் போர்டு அடித்தார். இயக்குநர் புச்சிபாபு சனா கேமராவை இயக்கினார்.‌ குன்னம் சந்தீப், நானி மற்றும்  ரம்யா குன்னம் ஆகியோர் இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை படக் குழுவினரிடம் ஒப்படைத்தனர். இப்படத்தின் முதல் காட்சியை ரவி நெலகுடிடி இயக்கினார்.

'தசரா' மற்றும் 'தி பாரடைஸ்' படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலாவும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இயக்குநர் ரவி நெலகுடிடி  துல்கர் சல்மானின் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஒரு தனித்துவமான மற்றும் புதிய கதையை கொண்டு வந்துள்ளார்.

இந்தப் படத்தின் தயாரிப்பு தரம் மற்றும் தொழில்நுட்பம் சர்வதேச தரம் என உறுதி அளிக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தில் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களும் இடம் பிடித்திருக்கிறார்கள் அனய் ஓம். கோஸ்வாமி ஒளிப்பதிவை கையாள, தேசிய விருதை வென்ற ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் .அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.‌

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.

இப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள்' நடிகைகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.‌

Tags: dulqer salman

Share via: