அசோக் செல்வன் தயாரித்து நடிக்கும் புதிய படம்

09 Feb 2025

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன்  இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத  திரைப்படத்தில் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். 

இத் திரைப்படத்தின் கதையை 'போர் தொழில்' படத்தின் இயக்குநரான விக்னேஷ் ராஜா எழுதியிருக்கிறார். இந்தப் படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். 

முழு நீள பொழுதுபோக்கு படமாக உருவாகும் இந்த திரைப்படத்தை ஹாப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

'ஓ மை கடவுளே' பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை வழங்கிய நிறுவனத்தின் இரண்டாவது படைப்பு இது என்பதாலும், 'போர் தொழில்'  பட இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதி இருப்பதாலும் இப்படத்திற்கு ஆரம்பத்திலேயே  ஒரு எதிர்பார்ப்பு கிடைத்துள்ளது. 

Tags: ashok selvan

Share via: