பிரஷாந்த் நடிக்கும் ‘அந்தகன்’
01 Jan 2021
2018ல் ஹிந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு ‘அந்தகன்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
‘அந்தகன்’ என்றால் பார்வை இல்லாதவன், என்று பொரு
ஜோதிகா நடித்து ஓடிடியில் வெளிவந்த ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கிய பிரெட்ரிக் இப்படத்தை இயக்க உள்ளார்.
ஸ்டார் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தில் பிரஷாந்த், கார்த்திக், சிம்ரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் கதாநாயகனுக்கு பியானோ வாசிக்கும் கதாபாத்திரம். கதாநாயகனாக நடிக்கும் பிரஷாந்த் லண்டன் இசைக் கல்லூரியில் நான்காவது கிரேடு முடித்துள்ளார் என படத்தின் தயாரிப்பாளர் அவரது அப்பா தியாகராஜன் தெரிவிக்கிறார்.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்க வந்துள்ள பிரஷாந்துக்கு இந்தப் படம் ‘திரும்ப வரும்’ ஒரு படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Tags: andhagan, prashanth, jj fredrick, fredrick, simran, karthik, santhosh narayanan, thiagarajan