வேடுவன் - வெப் சீரிஸ் - விமர்சனம்

11 Oct 2025
பிரபல நடிகர் கண்ணா ரவி, தனது கதாபாத்திரங்களில் முழுமையாக ஈடுபட்டு நடிப்பதில் பெயர் பெற்றவர். ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படமாக்க முயலும் இயக்குநர், அவரிடம் ஒரு சுவாரஸ்யமான கதையைச் சொல்கிறார். கதைப்படி, கண்ணா ரவி ரகசிய போலீஸ் அதிகாரியாக மாறி, ஒரு முன்னாள் ரவுடியை என்கவுண்டரில் கொல்ல வேண்டும். ஆனால், இந்தப் பணியில் ஈடுபடும்போது, அந்த ரவுடி சஞ்சீவ் - தனது முன்னாள் காதலி வினுஷா தேவியின் கணவர் என்பது தெரியவருகிறது. மேலும், சஞ்சீவ் இப்போது ரவுடி வாழ்க்கையை விட்டுவிட்டு, ஊர் மக்களுக்கு நன்மை செய்யும் ஒரு நல்ல மனிதராக மாறியிருப்பதையும் கண்ணா ரவி உணர்கிறார்.
 
இருந்தாலும், தனது மேலதிகாரியின் உத்தரவை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கும் கண்ணா ரவி, திட்டமிட்டபடி சஞ்சீவை என்கவுண்டர் செய்தாரா ? இந்த சினிமா கதை, உண்மை வாழ்க்கையில் அவரை எப்படி பாதித்தது ? அதன் விளைவுகள் என்ன? என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் விறுவிறுப்புடன் விவரிக்கிறது 'வேடுவன்' தொடர். இருந்தாலும், தனது மேலதிகாரியின் உத்தரவை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கும் கண்ணா ரவி, திட்டமிட்டபடி சஞ்சீவை என்கவுண்டர் செய்தாரா ? இந்த சினிமா கதை, உண்மை வாழ்க்கையில் அவரை எப்படி பாதித்தது ? அதன் விளைவுகள் என்ன? என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் விறுவிறுப்புடன் விவரிக்கிறது 'வேடுவன்' தொடர்.
இது ஒரு புதுமையான ஆக்ஷன்-சஸ்பென்ஸ் திரில்லர், நடிகரின் வேடங்களுக்கும் உண்மைக்கும் இடையிலான மோதலை சுவாரஸ்யமாகக் காட்டுகிறது.
நடிகராக இருப்பதால், கண்ணா ரவிக்கு இந்தத் தொடரில் பல்வேறு வேடங்கள் அணியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. போலீஸ் அதிகாரி, பிச்சைக்காரர், சமையல்காரர் என அனைத்து உருவங்களிலும் அவர் பொருந்திப் போகிறார். நடிப்பில் அசத்தல் - கடமைக்கும் மனசாட்சிக்கும் இடையிலான தடுமாற்றத்தை அழகாக வெளிப்படுத்துகிறார். காதல் காட்சிகளிலும் அவரது தேர்ச்சி பளிச்சிடுகிறது, பார்வையாளர்களை ஈர்க்கிறது.
சஞ்சீவ், ஆதிநாதன் என்ற தாதா வேடத்தில் தனது அனுபவத்தைப் பயன்படுத்தி, கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். அழுத்தமான ரோலாக இருந்தாலும், அளவான நடிப்பால் பார்வையாளர்களின் கவனத்தைத் தக்க வைக்கிறார். அவரது பாத்திரம், தொடரின் மையத்தில் நின்று பிரகாசிக்கிறது.
ஷ்ரவனிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, ரேகா நாயர், லாவண்யா போன்றோர் தங்களது பங்கை சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர். அவர்களின் நடிப்பு, கதையின் உணர்ச்சிப் பகுதிகளை வலுப்படுத்துகிறது.
தொழில்நுட்ப ரீதியாக, ஸ்ரீனிவாசன் தேவராஜின் ஒளிப்பதிவு தொடருக்கு உயிரோட்டம் அளிக்கிறது. விபின் பாஸ்கரின் பின்னணி இசை, சஸ்பென்ஸை உயர்த்தி அட்ரினலின் பம்ப் செய்கிறது. சூரஜ் கவியின் எடிட்டிங், காட்சிகளை இறுக்கமாக இணைத்து வேகத்தைத் தக்க வைக்கிறது. இந்தக் கலைஞர்களின் பங்களிப்பு, தொடரை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்கிறது.
எழுத்தாளரும் இயக்குநருமான பவன் குமார், வித்தியாசமான கதைச் சொல்லலுடன் ஒரு புதிய ஜானர் தொடரை உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு எபிசோட் முடியும்போதும், "அடுத்து என்ன?" என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருப்பங்கள் அருமை. ஆனால், சில காட்சிகளை தொலைக்காட்சி தொடர் போல கையாண்டிருப்பது சற்று ஏமாற்றம். இருப்பினும், நட்சத்திரங்களின் நடிப்பும், திருப்பங்களும் அந்தக் குறையை மறைத்து, தொடருக்கு நல்ல மதிப்பெண் வாங்கித் தருகின்றன.
மொத்தத்தில், 'வேடுவன்' - இணையத் தொடர் ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான வேட்டை. சஸ்பென்ஸ், ஆக்ஷன், உணர்ச்சி என அனைத்தும் கலந்து, பார்க்கத் தூண்டும் ஒரு சிறந்த பொழுதுபோக்கு!

Tags: veduvan, kanna ravi, sanjeev

Share via:

Movies Released On October 21