சலார் - விமர்சனம்

24 Dec 2023

பிரஷாந்த் நீல் இயக்கத்தில்,  ரவி பஸ்ரூர் இசையமைப்பில், பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

கே ஜி எஃப் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரஷாந்த் நீல், 'பாகுபலி' மூலம் இந்தியா முழுவதும் வரவேற்பு பெற்ற நடிகர் பிரபாஸ் இணைந்த படம் 'சலார்'. 

பிரபாஸ் தனது தாயுடன் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்கிறார்.புதிதாக ஊருக்கு வந்த ஸ்ருதி ஹாசனை ஒரு கூட்டம் தேடும் போது அமைதி குலைகிறது. பிரபாஸ் அந்த கும்பலை விரட்ட, அது கான்சார் நாட்டில் உள்ள தனது உயிர் நண்பரான பிருத்விராஜின் ஆட்கள் என்பதை கண்டுபிடித்தார். பிரபாஸ் யார்? இரு சிறந்த நண்பர்களுக்கிடையே பகை ஏற்பட காரணம் என்ன? என்பது தான் இப்படத்தின் கதை.

எத்தனை படைகள், எத்தனை பேர், எந்த நாட்டில் இருந்து வந்தாலும் பந்தாடும் விதமாக பிரபாஸ் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. சிறிய வசனங்கள், அதிக சண்டை என ரசிகர்களுக்கு விருந்தாக இப்படம் அவரது ரசிகர்களல்லக்கு அமைத்துள்ளது. 

பிரபாஸின் நெருங்கிய நண்பராக பிருத்விராஜ். கான்சர் நாட்டில் இருக்கும் பிருத்விராஜ் அங்கு மன்னராக ஆசைப்படுகிறார். அதற்காக அவர் நடத்தும் அரசியல் நாடகங்கள் விறுவிறுப்பானவை. முதல் பாகத்தில் பிரபாஸின் உயிர் நண்பனாக இருக்கிறார். இரண்டாம் பாகத்தில் இவர்கள் எப்படி எதிரி ஆனார்கள் என்பதை பார்கலாம்.

ஒரு சாம்ராஜ்யம், அதற்கு எப்படி கதாநாயகன், தலைவர் ஆகிறார் என்பது தான் இந்த படத்தின் மையக் கதை.

கேஜிஎஃப் சாயலில் இசை அமைத்துள்ளார் ரவி பஸ்ரூர். பிளாஷ்பேக் கேட்பதற்காகவும் கதையை துவக்கி வைக்க மட்டுமே ஸ்ருதி ஹாசன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது, இரண்டாம் பாகத்தில் முக்கியத்துவம் இருக்கலாம்.

பிரபாஸின் அம்மாவாக ஈஸ்வரி ராவ், கான்சார் மன்னராக ஜெகபதி பாபு, அவரது மகளாக ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

டெக்னிக்கலாக படம் பிரமாண்டமாக மிரட்டுகிறது. ஒளிப்பதிவாளர் புவன் கவுடா, எடிட்டர் உஜ்வல் குல்கர்னி,  சண்டை பயிற்சி அன்பறிவு கடுமையாக உழைத்து இருக்கிறார்கள். 

முதல் பாதியில் ஹீரோ பில்டப் காட்சிகளை மட்டுமே வைத்து,  இரண்டாம் பாதியில் முழு கதையும் குழப்பத்துலயே நகர்ந்து விடுகிறது.  இரண்டாம் பாகத்தில் அனைத்து கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்க்கலாம்.

 

 

Tags: salaar, salaar review, prabhas, prithviraj, prashanth neel, shruthi haasan

Share via: