நடிகர் தினேஷ் வெளியிட்ட ”பிளைன் பேப்பர்” குறும்படம்

03 Jan 2025

LV production & கார்த்திக் துரை வழங்க, அறிமுக இயக்குநர் மகிழன் இயக்கத்தில், பெண்ணின் வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் அவளுக்கு தான் உண்டு என்பதைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள “பிளைன் பேப்பர்” குறும்படத்தினை, லப்பர் பந்து புகழ் தினேஷ் வெளியிட்டார்.

அறிமுக இயக்குநர் மகிழன் தன் முதல் முயற்சியாக, தன் நண்பர்களுடன் இணைந்து இந்த குறும்படத்தினை உருவாக்கியுள்ளார். திரைப்படத்திற்கு இணையாக படைப்பாக, மிகச்சிறந்த தொழில் நுட்பத் தரத்துடம் இக்குறும்படம் உருவாகியுள்ளது.

ஆணும் பெண்ணும் சமம் என்பது, இன்றும் ஏட்டளவில் தான் இருக்கிறது. எவரையும் பார்த்தவுடன் அவர்களைப்
பற்றி முன்முடிவுக்கு வந்து விடக்கூடாது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட வாழ்க்கை இருக்கிறது. அவர்களுக்கென தனிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. எனும் கருத்தை மையமாக வைத்து இக்குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண் திருமண உறவில் பாதிப்பட்டு, மன அழுத்தத்தில் இருக்கும் பெண் குடியில் உழல்கிறாள் அவளது வாழ்வில் வரும், இளைஞனால் அவளது வாழ்க்கை மாறுவது தான் இந்த குறும்படத்தின் கதை.

மாறுபட்ட கதைக்களத்தில் பெண் சுதந்திரத்தின் அவசியத்தை பேசும் அழகான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை, முன்னணி பிரபல நடிகர் தினேஷ் மற்றும் இயக்குநர் லெனின் பாரதி பாராட்டியுள்ளனர்.

மகாலட்சுமி மற்றும் விஜய் இக்குறும்படத்தில் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரைப்பட முயற்சிகளில் இருக்கும் இப்படத்த அறிமுக இயக்குநர் மகிழன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் சவுந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்ய, தீசன் இசையமைத்துள்ளார். சரத் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.


இந்த குறும்படம் YouTube தளத்தில் Lightz On சேனலில் பார்க்க கிடைக்கிறது..

குறும்பட லிங் -

Tags: PlainPapper, Short Film, women freedom

Share via: