மெஸன்ஜர் - விமர்சனம்
31 Oct 2025
காதல் தோல்வியின் உச்சத்தில் தற்கொலைக்கு முயலும் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக். அந்தத் தருணத்தில் ஃபேஸ்புக் மெஸன்ஜரில் தொடர்ந்து வரும் அந்நியச் செய்தி: “தற்கொலை செய்து கொள்ளாதீர்கள், உங்களை நேசிப்பவர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள்.” அதிர்ச்சி என்னவென்றால், செய்தி அனுப்பிய பெண் இரு மாதங்களுக்கு முன்பே இறந்துவிட்டவர்! இறந்தவர் எப்படி செய்தி அனுப்ப முடியும்? உண்மையில் அவர் இறந்துவிட்டாரா? இந்த மர்மத்தை ஆராயும் ஸ்ரீராமுக்கு வெளிப்படும் ரகசியங்கள், “மனிதன் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல” என்ற உண்மையை நோக்கி அழைத்துச் செல்கின்றன. திகில் தொடங்கி, காதல் விரியும் இந்தப் பயணமே ‘மெஸன்ஜர்’.
வித்தியாசமான கதை, வினோதமான காட்சிகள் என அனைத்தையும் தனது இயல்பான நடிப்பால் தாங்கி நிற்கிறார் ஸ்ரீராம் கார்த்திக். தமிழ் சினிமாவில் ‘ஹீரோ பஞ்சம்’ பேசுபவர்கள், இவரைப் போன்ற திறமையாளர்களைப் பயன்படுத்தி அந்தக் குறையை நிரப்பலாம். முன்னாள் காதலியாக மனிஷா ஸ்ரீ, கவர்ச்சி காட்டாமலேயே உணர்வுபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார். ஒரு லிப்-லாக் காட்சியில் தனது பங்களிப்பை முத்திரைப் போட்டிருக்கிறார்.
கிராமத்துப் பெண்ணின் அப்பாவித் தன்மையையும், எதிர்பார்ப்பையும் முகத்தில் ஏந்தி, கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறார் பாத்திமா. பாத்திமாவின் தோழியாக வைசாலி ரவிச்சந்திரன், அழகும் கவர்ச்சியும் கொண்டு கவனம் பெறுகிறார். திருப்புமுனை கதாபாத்திரமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, பாதியிலேயே விலகி ஏமாற்றுகிறார். ஜீவா ரவி, லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ஆகியோர் துணை வேடங்களில் பொருத்தமான தேர்வு, கதையோடு ஒன்றி நிற்கின்றனர்.
பாடல்களோ பின்னணி இசையோ தனியாக பிரகாசிக்கவில்லை என்றாலும், மெதுவான திரைக்கதைக்கு ஏற்ற உணர்வலைகளை உருவாக்கி ரசிக்க வைக்கின்றன அபுபக்கர்.எம் இசை. கிராமத்து லொகேஷன்களை பல கோணங்களில் அழகாக்கி, நடிகர்களின் முகங்களை பளிச்சென்று படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பால கணேசன்.ஆர். திகில்-காதல் இடைமாற்றங்களை சுமுகமாக்கி, இயக்குநரின் புதுமையை உள்வாங்கி வழங்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரசாந்த்.ஆர்.
தமிழ் சினிமாவில் ‘பார்க்காத காதல்’, ‘ஒருதலைக் காதல்’ என பல வகைகள் வந்துவிட்டன. ஆனால், இயக்குநர் ரமேஷ் இளங்கமணி சொல்லும் இந்தக் காதல் – இதுவரை யாரும் தொடாத கோணம். திகிலாகத் தொடங்கி, காதலாக விரியும் போக்கு பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துகிறது. நடைமுறையில் சாத்தியமில்லாத கருவை, திரைமொழியில் சுவாரஸ்யமாக்கி, திரைக்கதை, காட்சியமைப்பு, கதைசொல்லல் மூலம் வித்தியாசமான அனுபவத்தை அளிக்கிறார்.
வழக்கமான திகில்-காதல் சூத்திரங்களை உடைத்து, புதிய சிந்தனையைத் தூண்டும் ‘மெஸன்ஜர்’.

Tags: messenger