கொரானோ மருத்துவமனையாக மாறும் ரயில் பெட்டிகள்

கொரானோ வைரஸ் பரவல் மேலும் அதிகமாகலாம் என்ற அச்சத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அதன் ஒரு கட்டமாக இந்திய ரயில்வே துறையில் உள்ள ரயில் பெட்டிகளை மருத்துவமனைகளாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அவற்றை தனிப்படுத்தப்பட்ட கொரானோ வார்டுகளாக பயன்படுத்த உள்ளார்கள். அனைத்து மருத்துவ உபகரணங்களுடன் அந்த வார்டுகள் அமைய உள்ளன

அஸ்ஸாம் மாநிலத்தில் அப்படி மாற்றப்பட்டுள்ள ஒரு ரயிலின் மாதிரியை இந்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.