கொரானோ பரவல் - உலக நிலவரத்தைக் காட்டும் 'கூகுள் மேப்'

26 Mar 2020

உலக அளவில் கொரானோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரானோ முதன்முதலில் பரவ ஆரம்பித்த சீனா நாட்டில் அது தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. அதே சமயம், அங்கிருந்து உலகம் முழுவதுமே தற்போது பரவிவிட்டது.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி நாடுதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது- பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை விரைவில் சீனாவைத் தாண்டும் நிலை அங்கு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் இத்தாலி நாடு திணறி வருகிறது.

இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியில் நடமாடுவது குறைந்துவிட்டது. 

இருப்பினும் ஒவ்வொரு நாளும் கொரானோவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கூடியே வருகிறது.

உலகம் முழுவதும் கொரானோ வைரசால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள கூகுள் நிறுவனம் புதிதாக ‘மேப்’ ஒன்றை வெளியிட்டுள்ளது. உலக வரைபடத்தின் எந்த நாட்டின் நிலைமையைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அங்கு ‘கர்சர்’ஐ நகர்த்தினால் அந்த எண்ணிக்கை தெரிய வரும். அதற்கான லின்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

https://google.org/crisisresponse/covid19-map

Tags: corono, corona, covid 19, corono virus, corona virus google map

Share via: