உலகக் கோப்பை 10வது ஆண்டு - கௌதம் காம்பீர் டிவீட்டால் சர்ச்சை

02 Apr 2020

1983ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி 2011ம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. 

2011ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று உலகக் கோப்பைய இரண்டாவது முறையாகக் கைப்பற்றியது.

இறுதிப் போட்டியில் ரன்கள் எதுவும் எடுக்காமல் முதல் விக்கெட்டை இழந்து இந்திய அணி தடுமாறியது. அடுத்து களமிறங்கிய கௌதம் காம்பீர் 97 ரன்கள்  அடித்து இந்திய அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.

ஆனாலும், 5வது விக்கெட்டுக்கு யுவராஜ் சிங் உடன் ஜோடி சேர்ந்து ஆடிய எம்எஸ் தோனி 79 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.

கடைசி பந்தில் அவர் அடித்த அந்த சிக்சர் இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இன்று அதைக் குறிக்கும் வகையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் கிரிக்கெட் இணையதளமான ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ ஒரு டிவிட்டர் பதிவை காலையில் பதிவிட்டது. 

https://twitter.com/GautamGambhir/status/1245562059309248513 

அதனால் சற்று கடுப்படைந்த கௌதம் காம்பீர், “ஞாபகப்படுத்துகிறேன், 2011 உலகக் கோப்பை இந்தியா முழுமைக்கும், இந்திய அணியினரும், அதன் ஆதரவு பணியாட்களும் சேர்ந்து  வெற்றி பெற்றது. ஒரு சிக்சர் என மட்டும் என நீங்கள் குறிப்பிடுவது அதிகபட்ச தொல்லையாக உள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய கருத்து டிவிட்டர் தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது 

Tags: world cup, india, ms dhoni, gautam gamhir

Share via: