A Lion’s Journey -எம்.எஸ். தோனி பற்றிய வீடியோ

07 Apr 2020

2008ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான வருடமாக அமைந்தது.

பலத்த ஏலப் போட்டிக்கிடையில்  எம்.எஸ். தோனியை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ஐபிஎல் முதலாவது சீசனுக்காக கேப்டன் ஆக நியமித்தது.

அன்றிலிருந்து பின்னடைவு என்பதே இல்லை. அவருடைய சிறந்த ஆட்டத்தாலும், திறமையாலும் அணியை முன்னெடுத்துச் சென்றார்.

மார்ச் 11, 2008ம் தேதியன்று எம்.எஸ். தோனி, தமிழ்நாட்டு மக்களால் ‘தல’ தோனி ஆனார். வார்த்தைகளில் அடக்க முடியாத அளவிற்கு மக்கள் அவருக்கு அன்பையும் ஆதரவையும் வழங்கினார்கள்.

“தென்னிந்தியாவிலும், சென்னையிலும் மக்கள் என்னை என் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள், ‘தல’ என்றே அழைப்பார்கள்,” என ‘ரிட்டர்ன் ஆப் த லயன்’ நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கிறார்.

ரிட்டர்ன் ஆப் த லயன் (Return of the Lion) நிகழ்ச்சி ஸ்டார் போர்ட்ஸ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

அந்நிகழ்ச்சியில் சிஎஸ்கே பற்றி பேசிய தோனி, “இந்தப் பயணம் 2008ம் ஆண்டு ஆரம்பமாயிற்று.  ஒரு மனிதனாகவும், ஒரு கிரிக்கெட்டராகவும் என்னை வளர்த்துக் கொள்ள சிஎஸ்கே உதவி புரிந்தது. நீங்கள் நன்றாக செய்து வந்தாலும், மைதானத்திற்கு வெளியிலும், உள்ளேயும் கடினமான சூழ்நிலைகளில் எவ்வளவு பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என புரிய வைத்தது,” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் ‘தல’ என அழைக்கப்படும் தோனியின் நீண்ட பயணத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் ஒரு எழுச்சி வீடியோவாக அனிமேஷன் வடிவத்தில் உருவாக்கி உள்ளது.2008 முதல் இன்று வரை அவரது பயணம் அதில் இடம் பெறுகிறது. 

கேப்டன், ஹெலிகாப்டர் ஷாட், சிஎஸ்கேவின் தூண் என பல விஷயங்கள் அதில் இடம் பெறுகின்றன.

வீடியோவைப் பார்க்க இந்த லின்க்கை க்ளிக் செய்யவும்....

https://www.instagram.com/p/B-euXXGDwBC/

Tags: a lions journey, csk, chennai super kings, dhoni, ms dhoni

Share via: