தமிழகத்தில் ‘நம்மவர் மோடி ரதயாத்திரை’

மத்திய அரசின் நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை கிராமப்புற மக்களுக்கு தெரிவிக்க நம்மவர் மோடி ரத யாத்திரை ஜனவரியில் தமிழகம் முழுதும் நடை பெற உள்ளது. பிரதான் மந்திரி ஜன்கல்யான்காரி யோஜனா பிரசார் அபியான் சார்பில் நாடு முழுதும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல், பெண்களுக்கு சுய தொழில் செய்ய வங்கி கடனுதவி, சிறு தொழிலுக்கான முத்ரா கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலதிட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் & பாண்டிச்சேரி பகுதிக்கு ஒருங்கிணைந்த நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இவர்களின் அறிமுக விழா சென்னையில் நடை பெற்றது. மாநில பொதுச் செயலாளர் ஜெய்கணேஷ் நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். மாநில கவுரவ தலைவர்களாக ஓய்வு பெற்ற நீதியரசர்கள் கிருஷ்ணன், வள்ளிநாயகம் ஆகியோரும், பெண்கள் பிரிவு மாநில செயலாளராக சசிகலா, பிரசார பிரிவு மாநில செயலாளராக சூரிய நாராயணன், இளைஞர் பிரிவு மாநில செயலாளராக கணேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் ஆக ராம்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். மத்திய அரசின் நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நம்மவர் மோடி ரத யாத்திரை ஜனவரியில் நடை பெற உள்ளது. இதற்காக மாநில ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து நியமிக்க உள்ளார். கல்வியாளர்கள், பிரபல சமூக ஆர்வலர்கள், மக்கள் சேவையில் பல ஆண்டுகளாக இருப்பவர்கள் ஓய்வு பெற்ற நீதியரசர்கள், காவல்துறை அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் என மாவட்டம் தோறும் பல்வேறு தரப்பிலும் நிர்வாகிகளாக நியமிக்கப்பட இருக்கிறார்கள். இவர்களை கண்டுபிடித்த்து நியமிக்க தான் ஜனவரியில் நம்மவர் மோடி ரத யாத்திரை நடைபெற உள்ளது. சுமார் 250 இரு சக்கர வாகன பேரணியும் நடைபெற உள்ளது.