ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணிகளில் மாற்றம்

09 Nov 2020

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய நாட்டில் நவம்பர் 27ம் தேதி முதல் ஜனவரி 19ம் தேதி வரை 3 ஒரு நாள் போட்டிகள் 3 டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றில் ஆட உள்ளது.

இதற்கான அணிகள் அக்டோபர் 26ம் தேதியன்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது இடம் பெற்றிருந்த சில வீரர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து தற்போது சில மாற்றங்கள் செய்து புதிய அணிகளை அறிவித்துள்ளார்கள்.

டி20 போட்டிகளில் இடம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்திக்குப் பதிலாக மற்றொரு தமிழக வீரர் டி.நடராஜன் இடம் பெற்றுள்ளார். வருணுக்கு ஐபிஎல் போட்டியின் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் அவர் விலகியுள்ளார். 

டெஸ்ட் போட்டிகளுக்கு ரோகித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். விராட் கோலி மனைவி அனுஷ்கா ஷர்மா ஜனவரி மாதத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள உள்ளதால் அப்போது விராட் கோலிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே, அடிலெய்டில் முதல் டெஸ்ட் முடிந்தபின் அவர் இந்தியா திரும்பிவிடுவார்.

அணிகளின் விவரம்

டி 20 போட்டிகள்

விராட் கோலி, ஷிகர் தவன், மாயன்க் அகர்வால், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பான்டே, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சஹர், டி.நடராஜன்

ஒரு நாள் போட்டிகள்

விராட் கோலி, ஷிகர் தவன், ஷுப்மான் கில், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பான்டே, ஹர்திக் பாண்டிய, மாயன்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர், சஞ்சு சாம்சன்

டெஸ்ட் போட்டிகள்

விராட் கோலி, ரோகித் சர்மா, மாயன்க் அகர்வால், பிரித்வி ஷா, கேஎல் ராகுல், புஜாரா, ரஹானே, ஹனுமா விகாரி, ஷுப்மான் கில், விருத்திமான சஹா, ரிஷாப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அஷ்வின், முகம்மது சிராஜ்

Tags: cricket, india, australia,

Share via:

Movies Released On July 27